Rock Fort Times
Online News

லால்குடி அதிமுக சட்டமன்ற உறுப்பினர் லீமாரோஸ் வெற்றியை எதிர்த்து வழக்கு…!

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டம், லால்குடி சட்டமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் லீமா ரோஸ். இந்த தொகுதியில் திமுக சார்பில் பாரிவள்ளலும், த.வெ.க. சார்பில் கு.ப. கிருஷ்ணனும் போட்டியிட்டனர். இதில், த.வெ.க. வேட்பாளரை விட லீமாரோஸ் 2,739 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் பாரிவள்ளல் 55,565 வாக்குகள் பெற்றார். இந்நிலையில் அதிமுக எம்எல்ஏ லீமாரோஸின் வெற்றியை எதிர்த்து, திமுக சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் பாரிவள்ளல் சார்பில் வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், 7 நிறுவனங்களில் தனக்குள்ள பங்குகள் குறித்த விவரங்களை லீமா ரோஸ் மறைத்துள்ளதாகவும், அதிமுக துண்டு அணிந்து கொண்டு, தேவாலயங்களில் பிரச்சாரம் செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை விரைவில் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணைக்கு பட்டியலிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்