சிவகங்கையில் பெண் போலீசுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:-
நேற்று( ஜூன் 12) இரவு ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் பெண் ஒருவர் தன் பணியில் இருந்த போது தனது ஆண் நண்பருடன் பேசிக் கொண்டு இருந்துள்ளார்.
அப்போது அந்த ஆண் நண்பரும், அவரது நண்பர்கள் இரண்டு பேரும் பெண் காவலருக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்துள்ளனர். அவர்களிடம் இருந்து தப்பி ஓடிய அந்த பெண் காவலர் அவசர உதவி எண் 100-க்கு ஃபோன் செய்து புகார் தெரிவித்துள்ளார். அதன்பேரில், உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற காவல் துறையினர் பாதிக்கப்பட்ட பெண்ணை மீட்டனர். பின்பு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த ஆண் நண்பர் மற்றும் அவரது நண்பர்கள் இருவர் என மொத்தம் மூன்று பேரைக் கைது செய்து அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வைத்து தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் சமீபத்தில் அறிமுகப்படுத்திய சில நாட்களில் அதுவும் பெண் போலீசுக்கு அரங்கேறியுள்ள இந்த பாலியல் சம்பவம் தமிழ்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.