Rock Fort Times
Online News

ஏ.ஐ.தொழில்நுட்பத்தில் அச்சு அசல் மனிதர்களைப் போலவே உருவாக்கப்பட்ட ரோபோக்கள்…* வியப்பில் ஆழ்ந்த பார்வையாளர்கள்..! (வீடியோ இணைப்பு)

தற்போதைய நவீன உலகில் ஏஐ தொழில்நுட்பம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று வருகிறது. செயற்கை நுண்ணறிவு (AI) என்பது மனிதர்களின் கற்றல், பகுத்தறிவு, முடிவெடுத்தல் மற்றும் சிக்கல் தீர்க்கும் திறன்களைக் கணினிகள் மற்றும் இயந்திரங்கள் மூலம் உருவகப்படுத்தும் ஒரு தொழில்நுட்பமாகும்.

இது தரவுகளைப் பகுப்பாய்வு செய்து, முன்பு மனிதர்களால் மட்டுமே செய்யக்கூடிய பணிகளை தானாகவே செய்யக்கூடிய ஆற்றலைப் பெற்றுள்ளது. இதுதொடர்பான கண்காட்சி ஒன்று அண்மையில் வெளிநாட்டில் நடைபெற்றது. இதில், அச்சு அசல் மனிதர்களைப் போல தோற்றமளிக்கும் ஹியூமனாய்ட் ரோபோக்கள் காட்சிப்படுத்தப்பட்டன. இதில் பார்வையாளர்கள் கலந்து கொண்டு ரோபோக்களின் செயல்பாடுகளை பார்த்து வியப்பில் ஆழ்ந்தனர். அந்த ரோபோக்கள் மனிதர்களிடம் பேசுதல், சைகை காட்டுதல், முத்தம் கொடுத்தல் போன்றவற்றை செய்தன. எதிர்காலத்தில் மருத்துவம், தொழிற்சாலை, கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் மனிதர்களுக்கு துணையாக இத்தகைய ரோபோக்கள் பயன்பாடு இருக்கும் என தொழில்நுட்ப வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்