Rock Fort Times
Online News

மின்வாரிய தலைமை அலுவலக ‘ஹார்டு டிஸ்குகள்’ திருட்டு விவகாரத்தில் யாரும் தப்ப முடியாது…- அமைச்சர் நிர்மல் குமார்..!

சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள தமிழ்நாடு மின்வாரிய தலைமை அலுவலகத்தில் டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய தகவல்களை கொண்ட ‘ஹார்டு டிஸ்குகள்’ திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மேலாண்மைத் துறையின் கட்டுப்பாட்டில் இருந்த நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் அடங்கிய ‘டிஸ்குகள்’ திருட ப்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். கடந்த மே 16 மற்றும் 17ம் தேதிகளில் அலுவலகத்தில் இந்த திருட்டு நடைபெற்று இருக்கலாம் என்று அதிகாரிகள் மட்டத்தில் தெரிவிக்கப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் அடிப்படையில் சிந்தாதிரிப்பேட்டை  போலீசார்  வழக்குப்பதிவு செய்து சிசிடிவி  காட்சிகளை பார்வையிட்டு  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில்  சென்னை மின்வாரிய தலைமை அலுவலகத்தில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த மின்துறை அமைச்சர் நிர்மல்குமார், ”ஹார்டு டிஸ்குகள்’ திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த மாதம் சிலரை பணியிடை நீக்கம் செய்தோம். அதன் பிறகு இது நடந்ததா என விசாரணை நடைபெற்று வருகிறது. எந்த இன்டென்ஷனில் ஹார்டு டிஸ்க்களை எடுத்தார்கள் என்பது குறித்து விசாரித்து வருகிறோம். ஒப்பந்த தொழிலாளர் தொடர்பான ஆவணங்களும் காணாமல் போய் உள்ளது. இதை திருடியது யார்? இதற்குப் பின்னால் யார் இருக்கிறார்கள்? என்ன மாதிரியான தகவல்களுக்காக இது திருடப்பட்டது என அனைத்தும் விசாரணை செய்து கண்டுபிடிக்கப்படும். இந்த விஷயத்தில் யாரும் தப்ப முடியாது’ என்று தெரிவித்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்