Rock Fort Times
Online News

சுபமுகூர்த்த தினம்: சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவுக்கு இன்று கூடுதல் முன்பதிவு டோக்கன்கள்…!

தமிழக அரசின் பதிவுத்துறை தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- சுபமுகூர்த்த தினம் உள்ளிட்ட நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் (டோக்கன்) ஒதுக்கிடு செய்யப்படுகிறது. தற்போது வைகாசி மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான இன்று (வெள்ளிக்கிழமை) அதிகளவில் பத்திரப்பதிவுகள் நிகழும் என்பதால் கூடுதலாக முன்பதிவு டோக்கன்கள் ஒதுக்கிடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன. அதன்படி, இன்று( மே 29)
ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100 க்கு பதிலாக 150 முன்பதிவு டோக்கன்களும், இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு டோக்கன்களும், அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும். 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு டோக்கன்களுடன் ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு டோக்கன்களும், கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு டோக்கன்களும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்