Rock Fort Times
Online News

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் புதிய வருமான வரி சட்டம் குறித்த விளக்க கூட்டம்… * திருச்சியில் நாளை (மே 27) நடக்கிறது..!

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில பொதுச் செயலாளர் வி. கோவிந்தராஜூலு
வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

மத்திய அரசு புதிய வருமான வரி சட்டம் 2026-ஐ கடந்த 01.04.2026 முதல் அமல்படுத்தியுள்ளது. இச்சட்டம் தொடர்பாக வருமான வரி செலுத்தும் வணிகர்களுக்கு உரிய விளக்கங்கள் அளித்திடும் நோக்கில் வருமான வரித்துறையின் திருச்சி மண்டல துணை ஆணையர் அலுவலகம் சார்பில் விளக்கம் மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நாளை (27.05.2026) புதன்கிழமை மாலை 4 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் பெமினா காவேரி ஹாலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் வருமான வரித்துறையின் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டு புதிய வருமான வரி சட்டம் தொடர்பான விளக்கங்களை அளிக்க உள்ளனர். இக்கூட்டத்தில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொள்ள உள்ளனர். இதில் வருமான வரி செலுத்தும் வணிகர்கள் பெருமளவில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்