இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியைச் சேர்ந்த ஷாஜகான், வி.சி.க.வை சேர்ந்த வன்னி அரசு அமைச்சர்களாக பொறுப்பேற்பு…!
தமிழ்நாடு அமைச்சரவையில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைய சம்மதம் தெரிவித்த நிலையில், அந்த கட்சிகளை சேர்ந்த தலா ஒரு சட்டப்பேரவை உறுப்பினர்கள் இன்று (மே 22) அமைச்சர்களாக பதவியேற்றனர். ஐ.யூ.எம்.எல் கட்சியில் இருந்து பாபநாசம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராகத் தேர்வான ஷாஜகானும், வி.சி.க சார்பில் அக்கட்சியின் துணை பொதுச் செயலாளரும், திண்டிவனம் சட்டப்பேரவை உறுப்பினருமான வன்னியரசும் விஜய் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்றுக்
கொண்டனர். இவர்களுக்கு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் மக்கள் மாளிகையில் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதலாவதாக, பதவியேற்றுக் கொண்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர் ஷாஜகான், ‘இறைவன் மீது ஆணையாக’ என்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டார். இதனைத் தொடர்ந்து பதவியேற்ற வி.சி.க வன்னி அரசு, ‘உளமாற’ உறுதிமொழி எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்விலும், தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. முதலாவதாக வந்தே மாதரம் பாடலும், அதனைத் தொடர்ந்து தேசிய கீதமும் பாடப்பட்ட பின், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது.

Comments are closed.