Rock Fort Times
Online News

தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம்:* தமிழ்த்தாய் வாழ்த்து மீண்டும் 3-வது இடத்துக்கு தள்ளப்பட்டதால் சர்ச்சை..!

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அமைச்சரவை இன்று(21-05-2026) விரிவாக்கம் செய்யப்பட்டது. இதில், காங்கிரஸ் கட்சியின் ராஜேஷ் குமார் மற்றும் விஸ்வநாதன் உள்ளிட்ட 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றனர். மேலும், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய இரு கட்சிகளை சேர்ந்தவர்கள் அமைச்சரவையில் பங்கேற்கவில்லை. அதேபோல் அதிமுக கூட்டணியில் ஒரு பிரிவினரான சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி. வேலுமணி தரப்பிற்கு அமைச்சரவையில் இடம் அளிக்கப்படவில்லை. 23 புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்குவதற்கு முன் பதவியேற்க உள்ளவர்களை ஆளுநருக்கு முதலமைச்சர் விஜய் தனித்தனியாக அறிமுகம் செய்து வைத்தார். விழா தொடங்கியதும் முதலில் வந்தே மாதரம் பாடப்பட்டது. பின்னர் தேசிய கீதமும், அடுத்ததாக தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டது. ஏற்கெனவே கடந்த 10-ந் தேதி விஜய் தலைமையிலான அரசு பதவியேற்ற போது, தமிழ்த்தாய் வாழ்த்து 3-வது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில், பெரும் சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்து கூட்டணிக் கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து அன்றிரவு பதில் அளித்த அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, இது போன்ற நிகழ்வுகள் இனி நடைபெறாது என்று உறுதி அளித்திருந்தார். தற்போது தமிழ் தாய் வாழ்த்து மீண்டும் மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்