Rock Fort Times
Online News

அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வு…திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்!

அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப் போவதாக திமுக முன்னாள் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்ட பழனிவேல் தியாகராஜன், 19128 வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வேட்பாளர் மதார் பத்ருதீனிடம் தோல்வியடைந்தார். இந்நிலையில் அரசியலில் இருந்து சிறிது காலம் ஓய்வெடுக்கப் போவதாக பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ஒரு சட்டப்பேரவை உறுப்பினராக கடந்த 10 ஆண்டுகளாக எனது குழுவுடன் நேரம் பாராமல் உழைத்தது எனது பொறுப்பாகும். தற்போது தனிப்பட்ட குடிமகனாக எனது நேரம் மற்றும் கால அட்டவணை முழுவதும் நானே தீர்மானிக்கும் சுதந்திரத்துடன், சில வாரங்கள் ஓய்வெடுக்க ஆவலுடன் காத்திருக்கிறேன். முன்னதாக நேரமின்மை காரணமாக நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று உரையாற்றுவதற்கான பல வாய்ப்புகளை மறுத்தேன். தற்போது அதுபோன்ற அழைப்புகளை என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். அமைச்சராக இருந்தபோது வெளிநாடுகளுக்குச் சென்று உரையாற்றவோ அல்லது நிகழ்வுகளில் பங்கேற்கவோ வந்த அழைப்புகளை ஏற்றுக் கொண்டு பயணிக்க, பல சமயங்களில் எனக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இந்த ஓய்வுக் காலத்தில், அமெரிக்கா, ஐரோப்பியா, சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்குச் சென்று உரையாற்ற வாய்ப்பு கிடைத்துள்ளது. சமீபத்தில்தான் எனக்கு 60 வயது நிறைவடைந்தது என்பதால், எனது உடல்நலத்தை மேலும் மேம்படுத்தும் நோக்கில், ஒரு சீரான கால அட்டவணை மற்றும் சிறந்த வாழ்க்கை முறையின் மீது கவனம் செலுத்தவும் நான் விரும்புகிறேன். பொதுச் சேவையிலும், ஒரு மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதிலும் எனக்குள்ள ஆர்வம் சிறிதும் குறையாமல் அப்படியே உள்ளது. புத்துணர்ச்சியுடனும், புதுப்பிக்கப்பட்ட ஆற்றலுடனும் நான் மீண்டும் வருவேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்