தமிழ்நாடு 17-வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அப்போது தற்காலிக சபாநாயகர் கருப்பையா, எம்.எல்.ஏ.க்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதனைத்தொடர்ந்து இன்று( மே 12) சபாநாயகராக தவெக எம்.எல்.ஏ. ஜேசிடி பிரபாகர் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல், துறையூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான ரவிசங்கர் துணை சபாநாயகராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் அரசின் கொறடாவாக சபரிநாதன் நியமனம் நியமிக்கப்பட்டுள்ளார். விருகம்பாக்கம் தவெக எம்.எல்.ஏவான சபரிநாதன், முதலமைச்சர் விஜய்யின் கார் ஓட்டுநரான ராஜேந்திரனின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.