தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் தலைமையில் புதிய அரசு அமைந்துள்ளது. இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள் சிலர் மாற்றப்பட்டு வருகின்றனர். அந்தவகையில் தமிழக அரசின் நிர்வாகத்தில் முக்கிய ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இதுதொடர்பான அரசாணையை தமிழக அரசு இன்று (மே 12) மாலை வெளியிட்டது. அதில், முன்னாள் தலைமை செயலரான முருகானந்தம் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றப்பட்டார். உதயசந்திரன், அமுதா, மணிவாசன், கிறிஸ்துராஜ் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். நிதித்துறை செயலராக சித்திக், டாஸ்மாக் நிர்வாக இயக்குநராக நந்தகுமார் மாற்றப்பட்டனர். சுவர்ணா சுற்றுலா கழக முதன்மை செயலராக நியமிக்கப்பட்டார்.

Comments are closed.