நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று இருக்கிறது. ஆட்சி அமைக்க இன்னும் 10 இடங்கள் தேவைப்படும் நிலையில் வெற்றி பெற்றவர்களை சென்னை வருமாறு விஜய் அழைப்பு விடுத்தார். அதன்படி
சென்னை, பனையூரில் உள்ள த.வெ.க. தலைமை அலுவலகத்தில் தேர்தலில் வெற்றி பெற்ற த.வெ.க. எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் ஆட்சி அமைப்பது தொடர்பாக விவாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில், கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களின் ஏகோபித்த ஆதரவுடன் தமிழக வெற்றிக்கழக சட்டமன்றக் குழு தலைவராக விஜய் தேர்வு செய்யப்பட்டார். சட்டமன்ற குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ள விஜய், முதலமைச்சராக பொறுப்பேற்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.