திருச்சி கோட்டத்தில் பல்வேறு பிரிவுகளில் பொறியியல் பணிகள் நடைபெறுவதால் பின்வரும் ரெயில்களின் சேவைகளில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன. திருச்சி ஜங்ஷனில் இருந்து காலை 8.40 மணிக்கு புறப்படும் திருச்சி-காரைக்கால் டெமு ரெயில் (வண்டி எண்: 76820) வருகிற 6, 7, 8, 9, 11 மற்றும் 12-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து திருவாரூர் வரை மட்டுமே இயங்கும். மறுமார்க்கமாக காரைக்கால்- திருச்சி டெமு ரெயில் (வண்டி எண்: 76819) மேற்கண்ட தேதிகளில் காரைக்கால்- திருவாரூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருவாரூரில் இருந்து மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு திருச்சி செல்லும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதேபோல் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 8, 10 மற்றும் 12-ந்தேதிகளில் பகுதியாக ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயிலானது திருச்சியில் இருந்து இருகூர் வரை மட்டுமே இயங்கும். பின்னர், இருகூரில் இருந்து முன்பதிவில்லா சிறப்பு ரெயிலாக பாலக்காடு டவுன் புறப்பட்டு செல்லும். மேலும், திருச்சியில் இருந்து மதியம் 3.50 மணிக்கு புறப்படும் திருச்சி -ஈரோடு பாசஞ்சர் ரெயில்(வண்டி எண்:56105) வருகிற 7 மற்றும் 8-ந்தேதிகளில் மாலை 4.50 மணிக்கு புறப்பட்டு செல்லும். இதேபோல் திருச்சியில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்படும் திருச்சி- பாலக்காடு டவுன் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16843) வருகிற 9-ந்தேதி மதியம் 2 மணிக்கு புறப்பட்டு செல்லும். இந்த தகவலை திருச்சி கோட்ட ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாரி வினோத் தெரிவித்து ள்ளார்.

Comments are closed.