Rock Fort Times
Online News

கேரளாவில் ஆட்சியைக் கைப்பற்றுகிறது காங்கிரஸ் கூட்டணி…!

கேரளா​வில் 140 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இங்கு, மார்க்​சிஸ்ட் தலை​மையி​லான ஆளும் இடது ஜனநாயக முன்​னணி, காங்​கிரஸ் தலை​மையி​லான ஐக்கிய ஜனநாயக முன்​னணி, பாஜக தலை​மையி​லான தேசிய ஜனநாயக கூட்​டணி ஆகியவை பிரதான அணிகளாக களமிறங்கின. ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் காங்​கிரஸ் 95 தொகுதிகளில் போட்டியிட்டது. இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27 தொகுதிகளில் போட்​டி​யிட்டது. இதர தொகு​தி​கள் கூட்டணி கட்​சிகளுக்கு வழங்​கப்​பட்டன.இடது ஜனநாயக முன்ன​ணி சார்பில் மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 86 தொகு​தி​களில் போட்​டி​யிட்டது. இதர தொகு​தி​களில் கூட்​டணி கட்​சிகள் போட்டியிட்டன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 115 தொகு​தி​களில் போட்டியிட்டது. இதர தொகு​தி​கள் அதன் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்டன. 140 தொகுதிகளுக்கும் கடந்த ஏப்ரல் 9ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் பதிவான வாக்குகள் 43 மையங்களில் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 98 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இடது ஜனநாயக முன்னணி 38 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பாஜக 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகின்றன. அருதிப் பெரும்பான்மைக்கு 71 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும் எனும் நிலையில், காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 90க்கும் அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருவதால் அக்கூட்டணி மீண்டும் ஆட்சியை கைப்பற்ற இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்