Rock Fort Times
Online News

விஜய்யின் வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவுக்கான பயணம் ‘திடீர்’ ரத்து…!

வருகிற 4 -ம் தேதி தமிழக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் கோயில் கோயிலாக சென்று வருகிறார்கள். அந்த வகையில் விஜய்யும் திருச்செந்தூர் முருகன் கோவில், சீரடி சாய்பாபா கோவில்களில் சிறப்பு தரிசனம் செய்தார். இன்று( மே 2) நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலயம், நாகூர் தர்காவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார். அவரது பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழகத்தின் முக்கிய ஆன்மிகத் தலங்களான வேளாங்கண்ணி மற்றும் நாகூரில், விஜய்யின் வருகையை அறிந்த ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் ஆயிரக்கணக்கில் திரள வாய்ப்புள்ளது. இது பொதுமக்களுக்கு இடையூறையும், கூட்ட நெரிசலையும் ஏற்படுத்தும் என்பதால் பாதுகாப்பு கருதி இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை தொடர்பாக நாளை தவெக நிர்வாகிகளுடன் பனையூரில் விஜய் அவசர ஆலோசனை நடத்த உள்ளதால் இப் பயணம் ரத்து செய்யப்பட்டு இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்