Rock Fort Times
Online News

தமிழகத்தில் 2 நாட்கள் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை..!

வருகிற மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தையொட்டியும், வாக்கு எண்ணிக்கை தினமான மே 4-ம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், உழைப்பாளர் தினமான மே 1ம் தேதி (வெள்ளிக்கிழமை) அனைத்து டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அனைத்து டாஸ்மாக் மதுபான சில்லறை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், உரிமம் கொண்ட கிளப்புகள் மற்றும் அதைச் சார்ந்த பார்கள் மூடப்பட வேண்டும். மேலும்,உரிமம் கொண்ட ஹோட்டல்களைச் சார்ந்த பார்கள், மதுபான விற்பனையகங்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டு இருக்க வேண்டும். இதனை மீறி மதுபானம் விற்பனை செய்தால், கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல வாக்கு எண்ணிக்கை தினமான மே 4-ம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை நாளாகும். அன்றைய தினமும் மேற்கண்ட மதுபானக்கூடங்கள் மூடப்பட்டு இருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்