Rock Fort Times
Online News

வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் ‘ஜனநாயகன்’ படம் பார்த்த ஊழியர் கைது…!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 23-ம் தேதி ஒரே கட்டமாக நடந்து முடிந்தது. பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணும் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஓட்டுகள் பதிவான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் வி.வி.பாட் ஆகியவை பலத்த பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள ‘ஸ்டிராங் ரூம்’ எனப்படும் பாதுகாப்பு அறைகளில் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு உள்ளன. வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் இடங்களுக்கு தகுந்தபடி 3, 4 மற்றும் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒவ்வொரு மையத்திலும் 24 மணிநேரமும் சுழற்சி முறையில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகிறார்கள். சிசிடிவி கேமராக்கள் மூலமாகவும் கண்காணிக்கப்பட்டு
வருகிறது. இந்தநிலையில், வாக்கு எண்ணும் மையத்தின் கட்டுப்பாட்டு அறையில் சட்டவிரோதமாக ‘ஜனநாயகன்’ படம் பார்த்த சிசிடிவி மெயின்டனன்ஸ் ஊழியர் யுவராஜ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை அண்ணா பல்கலைக்கழக சிசிடிவி கட்டுப்பாட்டு அறையில் அமர்ந்து, ‘ஜனநாயகன்’ படம் பார்த்ததை அவரே சமுக வலைதளத்தில் பகிர்ந்த நிலையில், ஒப்பந்த ஊழியரான அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்