Rock Fort Times
Online News

வி.சி.க.வில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜிக்கு முக்கிய பொறுப்பு…!

விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகளான ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி இருவரும் கடந்த சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று எம்.எல்.ஏவாக உள்ளனர். இந்த முறை சட்டமன்ற தேர்தலில் இருவருக்கும் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கத்தில் இவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ்.பாலாஜி இருவருக்கும் கட்சியில் முக்கிய பொறுப்புகளை வழங்கி திருமாவளவன் அறிவித்துள்ளார். அதன்படி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொருளாளராக எஸ்.எஸ்.பாலாஜி நியமிக்கப்பட்டுள்ளார். மாநில முதன்மைச் செயலாளராக ஆளூர் ஷாநவாஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்