தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தாம் போட்டியிடும் சென்னை கொளத்தூர் தொகுதியில் இறுதிகட்ட தேர்தல் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசுகையில், சென்னை நான் பாசமாக வளர்த்த குழந்தை மாதிரி. கொளத்தூர் என் செல்லக்குழந்தை. ஆண்டு முழுவதும் நன்றாக படித்த மாணவன் தேர்வுக்கு முன்னதாக ரிவிஷன் செய்வதுபோல் வந்துள்ளேன். நான் வாக்கு கேட்டு வர வேண்டுமென எதிர்பார்க்க மாட்டீர்கள். கொளத்தூர் மக்களின் அன்பு அப்படி.10 நாட்களுக்கு ஒரு முறை இங்கு வருவேன்.10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் சென்னை முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டிருந்தது. தலைநகரை தத்தளிக்கவைத்த ஆட்சி அதிமுக. சென்னை வளர வேண்டுமென்றால் திமுக ஆட்சி மீண்டும் வர வேண்டும். கடந்த தேர்தலை போல இந்த தேர்தலிலும் திமுக வெற்றி பெற்று வரலாறு படைக்கும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.