தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் (ஏப்.23) நடைபெற உள்ளது. மே நான்காம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் ஒரு மாதமாக நடைபெற்ற தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் நிறைவு பெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் தனது தேர்தல் பிரச்சாரத்தை நிறைவு செய்தார். இந்தநிலையில் அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வாக்குரிமை நம் தலையெழுத்தை மாற்றும் ஜனநாயக ஆயுதம். வருகிற 23ம் தேதி நாம் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும். பொய் வாக்குறுதிகளை கொடுத்து மக்களை ஏமாற்றிவிட்டது திமுக. தமிழ்நாட்டில் சட்டம்- ஒழுங்கு சீரழிந்துவிட்டது. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. குடிமராமத்து திட்டம், அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டை கொடுத்தது அதிமுக அரசு. வளமான எதிர்காலத்தை தமிழ்நாட்டிற்கு வழங்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களியுங்கள் என அதில் அவர் கூறியுள்ளார்.

Comments are closed.