அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அந்தவகையில் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளும் அவர் இன்று(11-04-2026) சென்னையிலிருந்து விமானம் மூலம் திருச்சி வந்தடைந்தார். அப்போது அவருக்கு அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாலை அணிவித்தும், பூச்செண்டுகள் வழங்கியும் உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் கார் மூலம் தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களுக்கு சென்று அதிமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சிறப்புரையாற்றுகிறார்.

Comments are closed.