நடைபெற உள்ள 2026 சட்டமன்றத் தேர்தலில் 100% வாக்களிப்பை உறுதி செய்யும் வகையிலும், அனைவரும் தவறாது தங்களது ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தியும் மை பாரத் கேந்திரா திருச்சிராப்பள்ளி மற்றும் வீரமங்கை வேலுநாச்சியார் இளையோர் சங்கம் இணைந்து நடத்திய வாக்காளர் விழிப்புணர்வு பேரணி திருச்சியில் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான சிலம்ப வீராங்கனைகள் சிலம்பம் சுற்றியவாறு கலைக்காவிரி நுண்கலை கல்லூரியிலிருந்து சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

Comments are closed.