தமிழ்நாட்டில் வரும் ஏப்ரல் 23-ம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதையொட்டி திமுக, அதிமுக, நாதக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகள் தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் வாக்குறுதிகளை மக்களிடம் தெரிவிப்பதுடன், மற்ற கட்சிகளை விமர்சித்தும் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்த வகையில், போடிநாயக்கனூர் தொகுதியில் போட்டியிடும் ஓ.பன்னீர்செல்வம் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். அதிமுகவில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து திமுகவில் இணைந்த அவர், தற்போது திமுக சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில், போடிநாயக்கனூரில் நடைபெற்ற திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், அதிக வாக்குகள் பெற்றுத்தரும் பூத் முகவர்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்றும், அதிக வாக்குகள் பெறும் ஒவ்வொரு ஒன்றியச் செயலாளருக்கும் 5 பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

Comments are closed.