Rock Fort Times
Online News

முசிறியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை: ரூ.3 லட்சம் பறிமுதல்…!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் பொருட்டு தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் திருச்சி மாவட்டம், முசிறி, கரிகாலி பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் விமலா தலைமையிலான குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக ஸ்கூட்டியில் வந்த கரிகாலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவரை நிறுத்தி சோதனை செய்ததில் அவரிடம் 2 லட்சத்து 11ஆயிரத்து 500 ரூபாய் இருந்தது தெரியவந்தது. அந்த பணத்திற்கான ஆவணங்கள் எதுவும் அவரிடம் இல்லாததால் அந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு முசிறி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் லோகநாதனிடம் ஒப்படைக்கப்பட்டது. இதேபோன்று முசிறி அருகே காவிரி பெரியார் பாலத்தில் நிலையான கண்காணிப்பு அலுவலர் கண்ணன் தலைமையிலான குழுவினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சென்ற சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 1 லட்சத்து 2 ஆயிரம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்