Rock Fort Times
Online News

ரூ.82 லட்சம் வரி பாக்கி: ஜெயலலிதாவின் ஹைதராபாத் இல்லம் முடக்கம்…!

வரி பாக்கியை செலுத்தாததால், மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லத்தை முடக்கும் நடவடிக்கையை பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. நிலுவையில் இருக்கும் சுமார் 82 லட்ச ரூபாய் வரி பாக்கியை செலுத்துமாறு, ஜெயலலிதாவின் உறவினர்களுக்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பியும், அதுதொடர்பாக எந்த பதிலும் வராததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹைதராபாத் மாநகராட்சி விளக்கம் அளித்துள்ளது. யூசுஃப்குடாவில் உள்ள மாநகராட்சி வட்டம் எண் 38-இன் கீழ் வரும் ஸ்ரீநகர் காலனியில் தான் ஜெயலலிதாவுக்கு சொந்தமான இந்த கட்டிடம் அமைந்துள்ளது. தரைத்தளத்துடன் மொத்தம் நான்கு தளங்களை கொண்ட 8-3-1099/ஏ என்ற கதவு எண்ணுடன் கூடிய இந்தக் கட்டிடம் மறைந்த தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதாவின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்துக்கு 2017-ம் ஆண்டிலிருந்து வரி செலுத்தவில்லை என பெருநகர ஹைதராபாத் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்தாண்டு பிப்ரவரி மாதத்திலும் ஒருமுறை நோட்டீஸ் அனுப்பியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், பெருநகர துணை ஆணையரின் அறிவுத்தலின் பேரில், உதவி நகராட்சி ஆணையர் பல்ராஜ் தலைமையிலான நகராட்சி ஊழியர்கள் குழு, நேரடியாக சென்று இந்த கட்டடத்தை சீல் வைத்து பூட்டினர். மார்ச் 31 வரை அமலில் இருந்த ‘ஒருமுறைத் தீர்வுத் திட்டத்தின்’ (OTS) கீழ் வழங்கப்படக்கூடிய  லுகைகள் போக, செலுத்த வேண்டிய மொத்த நிலுவைத் தொகை ரூ.82,91,822 என்று அதிகாரிகள் கணக்கிட்டுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்