2026-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலை முன்னிட்டு வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருச்சி மாநகராட்சி மண்டல 4( பொன்மலை கோட்டம் ) அலுவலகத்தில், “வாக்களிப்பது அனைவரின் ஜனநாயக கடமை, வாருங்கள் 100 சதவீதம் வாக்களிப்போம்” என்ற வாசகங்கள் அடங்கிய விழிப்புணர்வு ராட்சத பலூனை பறக்க விட்டு தேர்தல் அலுவலர்கள் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள். இந்நிகழ்வில் மாநகராட்சி துணை ஆணையர்கள் த.கே.பாலு , ஆர். வினோத், வருவாய் கோட்டாட்சியர் சாலை தவவளன், உதவி ஆணையர் எம். கனகராஜ் மற்றும் அரசு அலுவலர்கள், மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டார்கள்.

Comments are closed.