Rock Fort Times
Online News

ஏப்ரல் 2-ந்தேதி திருவாரூரில் இருந்து பிரச்சாரத்தை தொடங்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின்…* 3-ம் தேதி திருச்சியில் ‘ரோடு ஷோ’…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 23-ந்தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்வது என்று இலக்கு நிர்ணயித்து தி.மு.க. தலைவர், முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் செயல்பட்டு வருகிறார். இதற்காக 22 கட்சிகளை ஒருங்கிணைத்து ‘மெகா’ கூட்டணியை உருவாக்கி உள்ளார். கூட்டணி கட்சிகளுக்குள் உடன்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அந்த கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது பற்றி ஆலோசனைகள் நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் நிறைவு பெற்றதும் திமுக வேட்பாளர்கள் பட்டியல், தேர்தல் அறிக்கையை முதல்வர் வெளியிடுகிறார். இதன்பிறகு தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து மாவட்டம் தோறும் சென்று பிரசாரம் செய்ய இருக்கிறார். அவர் ஏப்ரல் 2-ந்தேதி திருவாரூரில் இருந்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். அன்றைய தினம் அங்கு நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி பேசுகிறார். இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரம், சுற்றுப் பயண விவரம் தயாரிக்கப்பட்டு உள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்