Rock Fort Times
Online News

ராணிப்பேட்டை அருகே ஏரியில் மூழ்கி பள்ளி மாணவர்கள் 3 பேர் உயிரிழப்பு…!

ராணிப்பேட்டை அருகே திருவிக நகரை சேர்ந்த தனியார் பள்ளி மாணவர்களான பார்த்திபன் (12), நித்திஸ் (14), மற்றொரு சிறுவன் என 3 பேரும் சிப்காட் அருகே உள்ள மணியம்பட்டு ஏரியில் குளிக்கச் சென்றனர். அவர்கள் ஏரியில் குளித்து கொண்டிருந்தபோது ஒரு மாணவன் மட்டும் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் தத்தளித்தான். இதனைகண்ட இரண்டு மாணவர்களும் அவனை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவர்களும் நீரில் மூழ்கினர். அவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவர்களை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மாணவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே அவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் மாணவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நேரத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்