Rock Fort Times
Online News

அதிமுக ஆட்சிக்கு வந்தால் இல்லத்தரசிகளுக்கு விலையில்லா ஃப்ரிட்ஜ்…* இறுதி தேர்தல் அறிக்கையை வெளியிட்ட இபிஎஸ்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வருகிற ஏப்ரல் 23ம் தேதி நடைபெற உள்ள நிலையில், கட்சிகள் தங்களின் தொகுதிப் பங்கீட்டை மேற்கொண்டு வருகின்றன. இதற்கிடையே தமிழ்நாட்டின் எதிர்க் கட்சியான அதிமுக 3 கட்டங்களாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இந்த நிலையில் இன்று (மார்ச் 24) அதிமுக அலுவலகத்தில் இறுதிக்கட்ட தேர்தல் வாக்குறுதி பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ளார். இதில், மொத்தம் 297 வாக்குறுதிகள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் சில முக்கியமானவற்றை காணலாம்.

* அரிசி அட்டை கொண்ட குடும்பத் தலைவிகளுக்கு விலையில்லா ஃப்ரிட்ஜ் வழங்கப்படும்.

* அனைத்து அரிசி அட்டைதாரர்களுக்கும் ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் விலையின்றி தரப்படும்.

* தமிழ்நாட்டில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் வகையில் படிப்படியாக மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்கப்படும்.

* பத்திரிகையாளர்கள், புகைப்பட கலைஞர்கள் மற்றும் பதிவு செய்யப்பட்ட இணையதள நிருபர்களுக்கும், அரசு அங்கீகார அட்டை, மருத்துவ காப்பீடு மற்றும் ஓய்வூதியம் பாரபட்சமின்றி வழங்கப்படும்.

* அரசுப் பள்ளி மாணவர்களுக்கான மருத்துவப் படிப்பு இட ஒதுக்கீடு 7.5 சதவீதத்தில் இருந்து 10 சதவீதமாக உயர்த்தி வழங்கப்படும் என்பன போன்ற வாக்குறுதிகளை அளித்தார்.

ஏற்கெனவே கூறி இருந்தது என்ன?

* அனைத்து குடும்பங்களுக்கும் 10 ஆயிரம் ரூபாய் கருணைத் தொகை அளிக்கப்படும்.

* குலவிளக்கு திட்டம் என்னும் பெயரில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதம் ரூ.2,000 உதவித் தொகை வழங்கப்படும்.

* ஆண்களுக்கும் கட்டணமில்லா பேருந்து பயணம்

* வீடு இல்லாதவர்களுக்கு இலவச கான்கிரீட் வீடுகள் வழங்கப்படும்.

* மாணவர்களின் கல்விக் கடன்கள் ரத்து செய்யப்படும்.

* அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆண்டுக்கு 3 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட வாக்குறுதிகள் ஏற்கெனவே அளிக்கப்பட்டு இருந்தன.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்