Rock Fort Times
Online News

தரையிறங்கும் போது தீயணைப்பு வாகனத்தின் மீது விமானம் மோதியதில் 100 பேர் படுகாயம்…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள ஒரு விமான நிலையத்தில் தரையிறங்கிய விமானம் ஒன்று, தீயணைப்பு வாகனத்தின் மீது மோதியதில் சுமார் 100 பேர் படுகாயம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜாஸ் ஏவியேஷன் மூலம் இயக்கப்படும் ஏர் கனடா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் விமானம், கனடாவின் மாண்ட்ரியல் இருந்து புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் லாகார்டியா விமான நிலையத்திற்கு சென்றது. அந்த விமானம் லாகார்டியா விமான நிலையத்தில் தரை இறங்கும்போது ஓடுபாதையில் நின்று கொண்டிருந்த தீயணைப்பு வாகனம் மீது பயங்கர வேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் விமானம் தீப்பிடித்து எரிந்ததாக கூறப்படுகிறது. ஏர் கனடா எக்ஸ்பிரஸ் அளித்த தகவலின்படி, அந்த விமானத்தில் 72 பயணிகளுடன், 4 ஊழியர்கள் இருந்துள்ளனர். மேலும், தீயணைப்பு வாகனத்திலும் ஊழியர்கள் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக, விமானம் மோதியதில் சுமார் 100-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும், சிலர் மிகவும் மோசமான நிலையில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்