Rock Fort Times
Online News

உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.20 கோடி தங்கம், வெள்ளி நகைகள் பறிமுதல்…!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு உள்ளதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ரூ.50 ஆயிரம் மட்டும் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மேல் பணமாகவோ, பொருட்களாகவோ எடுத்துச் சென்றால் ஆவணங்கள் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை, பல்​லா​வரம் சட்​டப்​பேரவை தொகு​திக்கு உட்​பட்ட அனகாபுத்​தூர் பகு​தி​யில் தேர்​தல் நிலை கண் காணிப்பு குழு​வினர் வாகன சோதனை​யில் ஈடு​பட்​டிருந்​தனர். அப்​போது, ஒரு வாக​னத்தை நிறுத்தி சோதனை செய்​த​போது, 24 பெட்​டிகளில் மொத்​தம் 13 கிலோ தங்க நகைகள், 34 கிலோ வெள்ளி நகைகள் என மொத்​தம் ரூ.19.63 கோடி மதிப்பிலான நகைகளை பிரபல நகைக்​கடைக்கு எடுத்​துச் செல்​வது தெரிய​ வந்​தது. ஆனால், உரிய ஆவணங்​கள் இல்​லாத​தால் நகைகளை அதி​காரி​கள் பறி​முதல் செய்​து, வரு​மான வரித்துறை​யினரிடம் ஒப்​படைத்​தனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்