சேலத்தில் சரக்கு வாகனம், டூ வீலர் மீது அரசுப் பேருந்து மோதி விபத்து: இறந்த 8 பேரின் அடையாளம் தெரிந்தது…!
ஈரோட்டில் இருந்து சேலம் நோக்கி 30 பயணிகளுடன் இன்று( மார்ச் 20) 12 மணிக்கு சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து உத்தமசோழபுரம் பகுதியில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் வந்த சரக்கு வாகனத்தின் மீதும், தொடர்ந்து இருசக்கர வாகனத்தின் மீதும் மோதியது. இதில், சரக்கு வாகனத்தில் வந்த குழந்தை மற்றும் இருசக்கர வாகனத்தில் பயணித்தவர்கள் என 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். பேருந்தில் பயணம் செய்த 30 பயணிகள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில், டிப்பர் வாகனத்தில் வந்த மேலும் 4 பேர் படுகாயங்களோடு சேலம் அரியானூர் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இவர்கள் சிகிச்சை பலனின்றி இறந்தனர். இதனால் உயிர்ப்பலி 8-ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் உயிர் இழந்தவர்கள் பெயர் விவரம் முதலில் தெரியாமல் இருந்தது. தற்போது அவர்களது பெயர் விவரம் தெரிய வந்துள்ளது.
விபத்தில் இறந்தவர்கள் பெயர் விவரம்:
1) மணிகண்டன்
2) இருசாயி
3) செல்வராஜ்
4) அமுதா
5) குழந்தை நித்திஷ் கா ( 5)
6 ) ஜீவிகா (11 மாதம்)
7) முருகன்
8 ) சத்யா இந்த விபத்து தொடர்பாக அரசு பேருந்து ஓட்டுனர் ஐயன்துரையை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Comments are closed.