சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, சுமார் 20,000 துணை ராணுவப் படையினர் தமிழ்நாட்டில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெறவுள்ள தேர்தலை அமைதியாகவும், நியாயமாகவும் நடத்தும் நோக்கில் இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பதற்றமான வாக்குச்சாவடிகள் மற்றும் முக்கிய பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் பறக்கும் படையினர் மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்படுவதைத் தடுக்க, ரூ.50 ஆயிரத்துக்கு மேல் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்படுகிறது. தேர்தல் பணிக்காக 234 தொகுதிகளிலும் ஆயிரக்கணக்கான குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. மாநிலம் முழுவதும் 5.69 கோடி வாக்காளர்கள் மற்றும் 75,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகள் உள்ள நிலையில், அவற்றின் பாதுகாப்பிற்காக 300 கம்பெனி துணை ராணுவப் படையினர் பயன்படுத்தப்படுவார்கள் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேவைப்பட்டால் கூடுதல் துணை ராணுவப் படையினர் வரவழைக்கப்படுவார்கள் எனவும் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார்.

Comments are closed.