தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே வேடநத்தம் கிராமத்தில் கடந்த மார்ச் 10-ஆம் தேதி +2 படித்து வந்த மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் தர்ம முனீஸ்வரன் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (எஸ்.பி.) மதன் பேட்டியளித்தபோது, “இந்த வழக்கில் அறிவியல் பூர்வமான விசாரணை, சிசிடிவி காட்சிகள், மருத்துவ பரிசோதனை அறிக்கைகள் ஆகியவற்றின் அடிப்படையில் தர்ம முனீஸ்வரன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் நடந்த கிராமத்தில் மட்டும் சுமார் 800 ஆண்களிடம் விசாரணை நடத்தினோம். எந்த அழுத்தத்திற்கும் ஆளாகாமல், ஆதாரங்களின் அடிப்படையில் குற்றவாளியை கண்டறிந்துள்ளோம்” என்று தெரிவித்தார். மேலும், “குற்றவாளிக்கு உச்சபட்ச தண்டனை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும். விசாரணை தீவிரமாக தொடர்கிறது. மாணவியின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்கும் வகையில் அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்றும் அவர் உறுதியளித்தார்.

Comments are closed.