Rock Fort Times
Online News

எனது அரசியல் பாதையை பற்றி பேசுவதற்கு இபிஎஸ் மற்றும் ஆர்.பி. உதயகுமாருக்கு அருகதை இல்லை- ஓபிஎஸ் காட்டம்…!

சட்டப்பேரவைத் தேர்தலுக்காக திமுக சார்பில், ‘ஸ்டாலின் தொடரட்டும்; தமிழ்நாடு வெல்லட்டும்’, ‘தமிழ்நாடு தலைகுனியாது’ போன்ற பரப்புரை கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. இந்நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக, சமீபத்தில் திமுகவில் இணைந்த ஓ.பன்னீர்செல்வம் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், அண்ணா ஆரம்பித்த திமுகவில் என்னை இணைத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு எந்நாளும் நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஜெயலலிதா கொண்டுவந்த திட்டங்களை ஈபிஎஸ் நிறுத்தினார். ஸ்டாலின் அந்த திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார். அதிமுக கட்சியை அழித்த பெருமை எடப்பாடி பழனிசாமி மற்றும் ஆர்.பி. உதயகுமார் இருவரையே சாரும். எனக்கு எச்சரிக்கை விடுக்க உதயகுமாருக்கு என்ன தகுதி இருக்கிறது? உதயகுமார் தலைவராக ஏற்றுக்கொண்டிருக்கிற எடப்பாடி பழனிசாமி ஊர்ந்து சென்று, சசிகலா காலில் விழுந்து முதலமைச்சர் பதவியை பெற்றுக்கொண்டு, தற்போது அவரையே இழிவாகப் பேசுகிறார். என்னைப் பற்றியோ, நான் கடந்து வந்த அரசியல் பாதையைப் பற்றியோ பேசுவதற்கு அவர்களுக்கு அருகதை இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்