Rock Fort Times
Online News

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொலை: பெண் காவல் ஆய்வாளர் ‘சஸ்பெண்ட்’…!

12 -ம் வகுப்பு மாணவி கொலை வழக்கில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணா சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்டம், குளத்தூர் அருகே வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்பு பள்ளி மாணவி, நேற்று முன்தினம் காட்டுப்பகுதியில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட நிலையில், சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மாணவியின் சடலத்தை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை கண்டித்தும், குற்றவாளிகளை கைது செய்ய கோரியும் மாணவியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவத்திற்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், பா.ஜ.க.முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட
குற்றவாளிகளை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு கோணங்களில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா காட்சிகள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பரீதியில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாக நெல்லை சரக டி.ஐ.ஜி சரவணன் தெரிவித்துள்ளார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக முறையாக விசாரணை நடத்தவில்லை என புகார் எழுந்த நிலையில், விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பிரவீணாவை தற்காலிக பணியிடை நீக்கம்(சஸ்பெண்ட்) செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்