தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் எதிர்பார்க்கிறார்கள்…* திருச்சியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பேட்டி!
திருச்சி, பஞ்சப்பூர் அருகே தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் பொதுக்கூட்டம் இன்று(11-03-2026) நடைபெறுகிறது. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சரும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் திருச்சி வருகை தந்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தமிழ்நாட்டு மக்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் எதிர்பார்க்கிறார்கள். தமிழ்நாட்டு மக்களுக்கு
திமுகவின் தமிழ்விரோத கலாசாரம், தமிழர் விரோத தலைமை பிடிக்கவில்லை. மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும், மாநிலத்தில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியையும் தான் தமிழக மக்கள் விரும்புகின்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும். பிரதமர் மோடி தமிழக மக்களை பெரிதும் நேசிக்கிறார். தமிழ்க் கலாசாரத்தையும், பெருமையையும் அவர் மதிக்கிறார். நாட்டிலேயே சிறந்த மாநிலமாக தமிழகம் திகழ வேண்டும் என்று பிரதமர் விரும்புகிறார். டாஸ்மாக் மதுபான ஊழல், மணல் கொள்ளை, மோசமான சட்டம்-ஒழுங்கு நிலைமையை முடிவுக்குக் கொண்டு வரப்படும். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா ஆட்சி மீண்டும் கொண்டு வரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.