Rock Fort Times
Online News

திருச்சி மாநகராட்சி வார்டு எண் 8-ல், நவீன சமுதாய கழிப்பிடம்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்..!

திருச்சிராப்பள்ளி மாநகராட்சி வார்டு எண் 8 பகுதியில், மாநகராட்சியின் பொதுநிதித் திட்டத்தின் கீழ் ரூ.43.80 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள நவீன சமுதாய கழிப்பிட கட்டிடத்தை அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார். அப்போது அவர், இந்த சமுதாய கழிப்பிடத்தை தூய்மை மற்றும் சுகாதாரமாக எப்போதும் பராமரிக்கும் வகையில் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மாநகராட்சி அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இதில், மாவட்ட கலெக்டர் வே.சரவணன், மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஆணையர் மதுபாலன் மற்றும் கழக நிர்வாகிகள், அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்