Rock Fort Times
Online News

ஸ்ரீரங்கம் வேத பாடசாலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனா் எம். சத்யபிாியா ஐபிஎஸ் ஆய்வு !

ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற வேதபாடசாலை மாணவர்கள் 3 பேர் நேற்று முன்தினம் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். இந்நிலையில் திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் எம். சத்யபிரியா ஐபிஎஸ் ஸ்ரீரங்கத்தில் மாணவர்கள் பயின்ற வேதபாடசாலையில் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து சம்பவம் நடந்த கொள்ளிடம் ஆற்றுப் பகுதியில் ஆய்வு மேற்கொண்டு நடந்த சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டதுடன் இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க காவல்துறையினருக்கு அறிவுரைகள் வழங்கினார். இதையடுத்து ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில், காவல் துணை ஆணையா் அன்பு மற்றும்  காவல்துறை அதிகாரிகளுடன் இது போன்ற விபத்துகளை தடுப்பது குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில் :
ஸ்ரீரங்கம் கொள்ளிடம் ஆற்றில் குளிக்க சென்ற வேதபாடசாலை மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி இறந்த சம்பவத்தில் தற்போது 174 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. உரிய விசாரணை நடத்தி தேவைப்படும் பட்சத்தில் வழக்கின் பிரிவு மாற்றப்படலாம். கொள்ளிடம் ஆற்றில் ஆபத்தான, அபாயகரமான பகுதிகள் கண்டறியப்பட்டு, அங்கு எச்சரிக்கை போர்டுகள் வைக்கப்படும். திருச்சி மாநகர பகுதிகளில் கள்ளச்சாரயம் விற்பனை இல்லை. டாஸ்மாக் கடைகள் அனுமதிக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே செயல்படுகிறது. அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர பிற நேரங்களில் செயல்படும் கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்