Rock Fort Times
Online News

அந்த ‘சைகைக்கு’ என்ன அர்த்தம்? விளக்கம் கொடுத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்… (வீடியோ இணைப்பு)

தஞ்சையில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இல்ல திருமண விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், இந்த விழாவுக்கு நான் எந்த சூழலில் வந்திருக்கிறேன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். நேற்று இரவு வரை கூட்டணி கட்சியோடு பேசி ஒரு ஒப்பந்தத்தை முடித்துவிட்டுதான், அதுவும் வெற்றிகரமாக முடித்துவிட்டுதான், எல்லோரும் பாராட்டக் கூடிய வகையில் முடித்துவிட்டுதான் வந்திருக்கிறேன். நீங்கள் சமூகவலைதளங்களிலும், செய்தி சேனல்களிலும் பார்த்திருப்பீர்கள்.

ஒப்பந்தத்தை முடித்துவிட்டு காரில் ஏறும் போது கையால் ஒரு சைகை செய்திருப்பேன். அதை நான் திட்டமிட்டு செய்யவில்லை. காரில் ஏறும்போது அங்கிருந்த பத்திரிகையாளர்கள் எல்லாம் முடிந்துவிட்டதா? என கேட்டார்கள். அதற்கு நான் எல்லாம் முடிந்துவிட்டது என சைகை மூலம் சொன்னேன். அது இன்று வைரலாகியுள்ளது. மகிழ்ச்சியோடு நான் இங்கு வந்திருக்கிறேன். என்று விளக்கம் கொடுத்தார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்