Rock Fort Times
Online News

தொகுதி மக்களை சந்திப்பதற்காக மண்ணச்சநல்லூர் தொகுதியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம்…* அமைச்சர் கே.என்.நேரு திறந்து வைத்தார்..!

திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் சட்டமன்ற தொகுதி திமுக எம்.எல்.ஏ.வான எஸ்.கதிரவன் தொகுதி மக்களை சந்திக்க வசதியாக சமயபுரம் டோல் பிளாசா அருகில் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழகம் அருகே சுமார் 10,000 சதுர அடி பரப்பளவில் இரண்டு மாடிகள் கொண்ட பிரம்மாண்ட சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தை தனது சொந்த செலவில் கட்டியுள்ளார்.  அதன் திறப்பு விழா இன்று(26-02-2026) நடைபெற்றது. விழாவில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டு புதிய அலுவலகத்தை திறந்து வைத்தனர்.

இவ்வலுவலகத்தில் ஏசி வசதிகளுடன் கூடிய உணவகம், விருந்தினர்கள் தங்கி ஓய்வெடுக்க பிரத்தியேக அறைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இந்நிகழ்வில் லால்குடி எம்எல்ஏ அ.சௌந்தரபாண்டியன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் கே.வைரமணி, அந்தநல்லூர் ஒன்றிய செயலாளர் துரைராஜ், மண்ணச்சநல்லூர் ஒன்றிய சேர்மன் எதுமலை ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர் சீனிவாசபெருமாள், கேபிஏ செந்தில், சமயபுரம் நகரக் கழக செயலாளர் ராஜசேகரன், சமயபுரம் பேரூராட்சி தலைவர் சரவணன், இளைஞர் அணி நிர்வாகி சக்ரா ராஜ் திவாகர், வார்டு கவுன்சிலர் பிரதீப், இன்ஜினியர் டி.ஆர்.ராஜேஷ்குமார்,வழக்கறிஞர் முருகானந்தம் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்