இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு உடல் நலக்குறைவு காரணமாக நேற்று(25-02-2026) காலமானார். இன்று மாலை முழு அரசு மரியாதைக்கு பிறகு, அவரது உடல் மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக சென்னை மருத்துவக் கல்லூரிக்கு தானமாக வழங்கப்படுகிறது. காலமான நல்லகண்ணு உடல் மாலை 5 மணிக்கு சென்னை தி.நகர் செவாலியர் சிவாஜி கணேசன் சாலையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமான பாலன் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பொதுமக்கள், கட்சியினர், பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என ஏராளமானோர் நல்லகண்ணு உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று பிற்பகல் 3 மணிக்கு பிறகு, நல்லகண்ணுவின் விருப்பப்படியே அவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு மருத்துவ மாணவர்களின் ஆராய்ச்சிக்காக, சென்ட்ரலில் உள்ள சென்னை மருத்துவக் கல்லூரிக்கு (எம்எம்சி) – ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு தானம் வழங்கப்படவுள்ளது. தன் வாழ்நாள் முழுவதும் ஏழை, எளிய மக்களுக்காகவும் அவர்களின் உரிமைகளுக்காகவும் போராடியவர் நல்லகண்ணு. எளிமையாகவே வாழ்ந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று உயிர் நீத்தார். தனது உடலையும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஆராய்ச்சிக்காக தற்போது கொடுத்துள்ளார்.

Comments are closed.