தமிழ்நாட்டில் விரைவில் சட்டப் பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலம் முழுவதும் வாக்காளர் சிறப்புத் தீவிர திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சிறப்பு தீவிரத் திருத்தத்தைத் தொடர்ந்து மாநில தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தமிழ்நாடு முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று(23-02-2026) வெளியிட்டார். இந்த இறுதி வாக்காளர் பட்டியலின்படி, தமிழகத்தில் 5 கோடியே 67 லட்சத்து 7 ஆயிரத்து 380 வாக்காளர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், 2,77,38,925 ஆண்கள், 2,89,60,838 பெண்கள், 7,617 மூன்றாம் பாலினத்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில், இதில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லையா என்பதை தெரிந்து கொள்வது எப்படி என்பதை பார்க்கலாம். இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? என்பதை அறிந்துகொள்ள https://electoralsearch.eci.gov.in/ இந்த லிங்கை க்ளிக் செய்யவும். இந்த லிங்க் ஓபன் ஆனதும், மூன்று ஆப்சன்களை (SEARCH BY EPIC, SEARCH BY DETAILS, SERACH BY MOBILE) காட்டும். அதில் உங்களிடம் உள்ள தகவலுக்கு ஏற்ப ஆப்ஷனை க்ளிக் செய்யவும்.
1. SEARCH BY EPIC என்பதை க்ளிக் செய்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தளம் ஓபன் ஆகும். அதில், உங்கள் வாக்காளர் அடையாள அட்டையில் உள்ள எண் மற்றும் மாநிலத்தை பதிவிட்டு, பின்னர் சரியாக கேப்சாவை பதிவிட்டு search ஆப்சனை க்ளிக் செய்யவும்.
2. புதிய வாக்காளர் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியாதவராக இருந்தால் SEARCH BY DETAILS ஆப்ஷனை க்ளிக் செய்யவும். அதில், தேர்தல் ஆணையம் கேட்டுள்ள தகவல்கள் அனைத்தையும் சரியாக பதிவிடவும். பின்னர் கேப்சாவை சரியாக பதிவிட்டு search ஆப்சனை க்ளிக் செய்யவும்.
3. வாக்காளர் அடையாள அட்டை எண் மற்றும் அனைத்து தகவல்களும் சரியாக தெரியாது என்பவர்கள் மூன்றாவது ஆப்ஷனான SERACH BY MOBILE என்பதை க்ளிக் செய்யவும்.இதில் உங்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள தொலைபேசி எண்ணை பதிவிட்டு, உங்கள் மொபைலுக்கு வரும் OTP ஐ எண்ணை உள்ளிட்டு, கேப்சாவை சரியாக டைப் செய்து search ஆப்சனை க்ளிக் செய்யவும். இறுதி வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருந்தால் கீழே தகவல்கள் கிடைக்கும். இதில் உங்களது வாக்குச்சாவடி எது? என்பது முதல் அனைத்து தகவல்களும் இருக்கும்.

Comments are closed.