அதிமுக ஆட்சி காலத்தில் சட்டமன்ற சபாநாயகராக இருந்தவர் ப.தனபால். இவரது மகன் லோகேஷ் தமிழ்செல்வன். பி.காம் எம்பிஏ படித்துள்ளார். இவர் அதிமுக ஐடி பிரிவு அவிநாசி தொகுதி பொறுப்பாளராக பதவி வகித்துள்ளார். லோகேஷின் மனைவி லோ. தங்கபூர்ணிமா. சேலத்தில் பிறந்த லோகேஷ் தமிழ்செல்வன் ஐடி நிறுவனம் நடத்தி வருகிறார். இவரது மாமனார் நாமக்கல் அருணாச்சலம், எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் அதிமுகவின் அமைச்சராக இருந்தவர். கடந்த 2024ம் ஆண்டு மக்களவை தேர்தலில் அதிமுக சார்பில் நீலகிரி தொகுதியில் போட்டியிட்ட லோகேஷ் தமிழ்ச்செல்வன் தோல்வி அடைந்தார். இந்தநிலையில் அதிமுகவிலிருந்து விலகி விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார்.


Comments are closed.