வருகிற சட்டமன்ற தேர்தலில் காரைக்குடி தொகுதியில் சீமான் போட்டி… மேட்டூர் தொகுதியில் களம் காணும் வீரப்பன் மகள் வித்யா ராணி…!
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மற்ற கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் சீமான் தனித்தே போட்டியிடுகிறார். இந்நிலையில் திருச்சி-திண்டுக்கல் சாலையில் உள்ள ஆலம்பட்டி புதூரில் நாம் தமிழர் கட்சியின் மாநாடு இன்று(21-02-2026) நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை சீமான் அறிவித்து வருகிறார். அதன்படி , சீமான் காரைக்குடி தொகுதியில் போட்டியிடுகிறார். வீரப்பன் மகள் வித்யா ராணி மேட்டூர் சட்டமன்ற தொகுதியிலும், எடப்பாடி தொகுதியில் பிரியதர்ஷினியும் போட்டியிடுகின்றனர். மற்ற வேட்பாளர்கள் படிப்படியாக அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.

Comments are closed.