Rock Fort Times
Online News

உலக தாய்மொழி தினம்: ‘தமிழே நீ வாழ்ந்திடு” என முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு…! 

உலக தாய்மொழி தினம் இன்று (பிப்.21) அனுசரிக்கப்படுகிறது. தாய்மொழியின் அவசியத்தை உணர்த்தும்  வகையிலும், பன்மொழி கலாசாரத்தை அனுசரிக்கவும், ஆதரிக்கவும்  இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அவ்வகையில் இந்த ஆண்டின் சர்வதேச தாய்மொழி தினத்திற்கான கருப்பொருள் “பன்மொழி கல்வி குறித்த இளைஞர்களின் குரல்கள்” என்பதாகும். இதுகுறித்து தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:- தமிழே நீ வாழ்ந்திடு! இன்று உலகத் தாய்மொழிகள் நாள்! ஏராளமானோர் உயிர்கொடுத்துக் காத்த நம் உயிர்நிகர் தமிழ்மொழியை எத்தனை சிறப்புகள் சொல்லி அழைத்தாலும் “தமிழே” என்று அழைத்திடும்போது கிடைத்திடும் இன்பம் மகத்தானது. தலைவர் கலைஞரின் இந்த வரிகளைப் பாடலாக்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள். அவர்களுக்கு என் நன்றி! நம் தமிழைக் காத்து – அதை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் கொண்டு சேர்த்து, செழிப்போடு வாழவைக்க வேண்டியது உலகெங்கும் வாழும் அனைத்துத் தமிழர்களின் பொறுப்பு!  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்