Rock Fort Times
Online News

தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழு அமைப்பு- ம.தி.மு.க. அறிவிப்பு!

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள், கூட்டணி பேச்சுவார்த்தையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளது. இத்தகைய பரபரப்பான சூழலில் கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த திமுக சார்பில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே திமுக கூட்டணியில் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் உத்தேச பட்டியலை தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலினிடம், மதிமுக வழங்கியிருந்தது. இந்த பட்டியலில் மொத்தமாக 16 தொகுதிகளின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் சட்டப்பேரவை தேர்தலுக்கான தொகுதிப் பங்கீடு குறித்து திமுகவுடன் பேச்சுவார்த்தை நடத்த 4 பேர் கொண்ட குழுவை அமைத்து மதிமுக அறிவித்துள்ளது.  அந்த குழுவில் அக்கட்சியின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜ், மு. செந்திலதிபன், சு.ஜீவன் மற்றும் வி.சேஷன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்