கும்பகோணம் அரசு தலைமையகத்தில் போக்குவரத்து கழக ஊழியர்கள் ‘உலக தாய்மொழி தின உறுதிமொழி’ ஏற்பு நிகழ்ச்சி…!
உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் கும்பகோணம் தலைமையகத்தில் துணை மேலாளர் கே.மலர்கண்ணன் தலைமையில் ஊழியர்கள் அனைவரும் இன்று(20-02-2026) உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். “எங்கும் தமிழ், எதிலும் தமிழ், எப்போதும் தமிழ் என்ற நடைமுறையைக் கொண்டுவரப் பாடுபடுவோம்! தேமதுர தமிழோசை உலகெங்கும் ஒலிக்க எந்தாளும் உழைத்திடுவோம்! அனைத்து ஆவணங்களிலும் தமிழிலேயே கையொப்பமிடுவோம்! குழந்தைகளுக்கு தமிழ் மொழியில் பெயர் சூட்ட பரப்புரை செய்திடுவோம், இணையற்ற தமிழுடன் இணையத் தமிழையும் காத்து வளர்ப்போம் என்று அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் உதவி மேலாளர்கள் ஏ.தமிழ்செல்வன், என்.ராஜசேகர், கே.ராஜசேகர், கே.கோபால கிருஷ்ணன், கே.ஜெயக்குமார் மற்றும் போக்குவரத்துக் கழக அலுவலர்கள், ஓட்டுனர்கள், நடத்துனர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள், அலுவலக பணியாளர்கள், பாதுகாவலர்கள், தொழிற்சங்க பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்று உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

Comments are closed.