தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்றுடன்( பிப்.20) நிறைவடையும் நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலினை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சந்தித்தார். இதுகுறித்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், “ஐந்து ஆண்டுகால தி.மு.க. ஆட்சி சிறப்பாக இருந்தது. இதற்கு வாழ்த்து தெரிவிக்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை சந்தித்தேன். தி.மு.க.வின் ஐந்து ஆண்டு கால ஆட்சி சிறப்பாக இருந்ததால், மீண்டும் ஆட்சிக்கு வர வாய்ப்பு உள்ளது. மக்கள் நினைப்பதை தான் எனது ஆதரவு எம்.எல்.ஏ. ஐயப்பன் சட்டமன்றத்தில் பேசியுள்ளார்”. இவ்வாறு அவர் கூறினார். தி.மு.க.வில் இணைவீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஓ.பன்னீர்செல்வம், “பொறுத்து இருந்து பாருங்கள்” என்று தெரிவித்தார். தி.மு.க.வில் இணைவது பற்றிய கேள்விக்கு மறுப்பு தெரிவிக்காதது. ஓ. பன்னீர்செல்வம் தி.மு.க. ஆதரவு மனநிலையில் இருப்பதன் வெளிப்பாடாகவே பார்க்கப்படுகிறது.

Comments are closed.