தமிழக சட்டப்பேரவையில் இடைக்கால பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இடைக்கால பட்ஜெட் மீதான கேள்விகளுக்கு அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோர் பதிலுரை வழங்கி வருகின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக இன்றைய( பிப்.20) சட்டப்பேரவை கூட்டத்தில் மூத்த அமைச்சரும், அவை முன்னவருமான துரைமுருகன் பங்கேற்கவில்லை. அவை முன்னவர் என்பதால் அவருக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலினுக்கு அருகில் இருக்கை ஒதுக்கப்பட்டு இருந்தது. அந்த இருக்கை இன்றைய தினம் காலியாக இருந்ததால் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அமர்ந்திருந்தார். சட்டப்பேரவையின் கடைசி கூட்டத்தில் நன்றி தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை நிகழ்த்தினார்.

Comments are closed.